இலங்கையில் கோர விபத்தின் போது மக்களின் கொடூரமான மனநிலை - ஹீரோவாக செயற்பட்ட இளைஞன்
குருநாகல் - தம்புள்ள பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தின் போது சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பயணித்த பேருந்து, அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளின் பின்புறத்தில் மோதியது.
பேருந்தின் உள்ளே காயமடைந்தவர்கள் கதறி அழுது கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றாமல் தங்கள் தொலைபேசிகளில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
மக்களின் கோர மனநிலை
எனினும் காயமடைந்தவர்களை காப்பாற்ற எவரும் வரவில்லை. அம்புலன்ஸிற்கு அழைப்பை ஏற்படுத்தினோம் ஆனாலும் அரை மணி நேரமாகியும் வரவில்லை. ஒரு வாகனம் கூட நிற்கவில்லை.
மிக மோசமான சூழ்நிலையில், நான் ஒரு இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு ஒரு குண்டர் போல வீதிக்கு நடுவே ஓடி சென்று, ஒரு லொறியை வலுக்கட்டாயமாக நிறுத்தி, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்தேன்” என நேற்று அதிகாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கோர பேருந்து விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் 28 பேர் படுகாயமடைந்து குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை வட்டாரங்கள்
காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விபத்தில் இறந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் நடத்துனரும் ஒருவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த பேருந்து, முன்னால் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளுடன் மோதியதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குப் பிறகு அங்கு கூடியிருந்த உள்ளூர்வாசிகள் மற்றும் பிற பேருந்துகளின் பயணிகள், விபத்தில் சிக்கிய பேருந்துகளில் சிக்கிய காயமடைந்தவர்களை வெளியே எடுத்தனர்.
இருப்பினும், காயமடைந்தவர்களை மீட்பதற்கு பதிலாக, சிலர் தங்கள் கையடக்க தொலைபேசிகளில் அவர்கள் அழுவதையும் அலறுவதையும் காணொளிகளைப் பதிவு செய்வதைக் காண முடிந்தது.
கவன குறைவு
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எந்த வாகன ஓட்டுநர்களும் முன்வரவில்லை, விபத்து நடந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகுதான் அம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தை அடைந்தன.
அந்த நேரத்தில், உள்ளூர்வாசி ஒருவர் இரும்பு கம்பியுடன் முன்வந்து வீதியில் குதித்து, ஒரு லொறியை வலுக்கட்டாயமாக நிறுத்தி, காயமடைந்தவர்களை அதில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.
இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
விசாரணையில், அதிவேகத்தில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)