கிளிநொச்சியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி - பூநகரி வாடியடி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (11-04-2024)இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பொலிஸார் விசாரணை
பூநகரி பகுதியில், கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறு சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தின் போது பூனகரி பள்ளிக்குடா பூனகரியை சேர்ந்த இராஜலிங்கம் சங்கீதன் ( வயது 36 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri