கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து.. நால்வர் பலி - நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட உடல்கள்
புதிய இணைப்பு
கிளிநொச்சி - ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மேலும் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று மோதி குறித்த விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது காரில் பயணித்த ஐவரில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
அதேவேளை காருக்குள் நசியுண்ட இருவரின் உடல்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதிய இணைப்பு
விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

அதேநேரம், காரில் இருந்த ஏனைய மூவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செய்தி - தேவந்தன்
முதலாம் இணைப்பு
சற்று முன்னர், கிளிநொச்சி - ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
முரசுமோட்டை பகுதியில் நடந்த குறித்த சம்பவத்தில் காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி - சுடரோன்







பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri