கிளிநொச்சியில் விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்த சம்பவத்தில் குமரபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மகேந்திரராசா யூட்கபிசன் மற்றும் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சவுந்தானந்தன் காந்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் பியர் போத்தல்களும் காணப்பட்டுள்ளன. குறித்த இருவரில் ஒருவர் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
