யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து: படுகாயமடைந்த இரு பெண்கள்
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்களை மோதித் தள்ளிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அந்த பெண்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து
இன்று(16) வியாழக்கிழமை 7.30 மணியளவில் யாழ். நகரின் மார்ட்டின் வீதிக்கு அண்மையாக பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, விபத்தில் படுகாயங்களுக்கு இலக்கான இரு பெண்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மோதிய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அதன் இலக்கத் தகடுகளில்
ஒன்று மோதிய மோட்டார் சைக்கிளில் சிக்கியுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு(15) வீதியை கடக்க முற்பட்டபோது லொறி மோதியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் பற்றி விபரம் தெரியவில்லை எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி-பதுர்தீன் சியானா



