யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பலி(Photos)
யாழ்ப்பாணம் - அராலி,வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்றைய தினம்(29.06.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த, யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது 37) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும்(மெக்கானிக்) அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்துடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த இராசதுரை சூரியகுமார் (வயது 29) என்பவர் சிறு காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக தகவல்-தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
