யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் (Photos)
யாழ்.பலாலி வீதி இலுப்பையடி சந்திப்பகுதியில் பட்டா ரக மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து சம்பவமானது இன்று இடம்பெற்றுள்ளது.
நாவலர் வீதி வழியாக பயணித்த பட்டா ரக வாகனமும், பலாலி வீதி வழியாக வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் பட்டாவின் முன் சில்லுக்குள் மோட்டார் சைக்கிள் சிக்கி கொண்டதோடு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பாய்ந்ததன் காரணமாக படுகாயமடைந்துள்ளார்.
இதன்போது விபத்தில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
