யாழில் பேருந்தொன்று விபத்து - 20இற்கும் மேற்பட்டோர் காயம்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ். காரைநகர் பகுதியில் இன்று காலை பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே கல்லுண்டாய் வீதியில் வைத்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேருந்து வேகமாக பயணித்துள்ள நிலையில் அப்பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




