வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தரித்து நின்ற கார் பிரதான கண்டி வீதியில் செல்ல முற்படும்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குடும்பப் பெண் மீது மோதிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது .
இதன்போது காயமடைந்தவர் உடனடியாக பொலிஸாரினால் அங்கிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் விபத்தை ஏற்படுத்திய கார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .







சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
