கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் மரணம்
கனடாவில் நடந்த விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
கனடா, ஸ்கார்பாரோ, கிங்ஸ்டன் மற்றும் போர்ட் யூனியன் வீதிக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 23 வயதுடைய அஸ்வின் சந்திரராஜ் என்ற யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனம் ஒன்றும் TTC பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் மோட்டார் வாகனத்தை ஓட்டி சென்ற தமிழ் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
TTC பேருந்து சாரதியான 61 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளார். விபத்த இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் ஒருவரும் பயணிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பல மணி நேரங்கள் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam