மட்டக்களப்பில் விபத்து - ஒருவர் பலி (Photos)
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட கல்முனை பிரதான வீதி ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (07) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நாகராசா விஜேந்திரன் (வயது 58) எனும் அரச உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் நோக்கி பணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பின்னால் சென்ற சொகுசு ரக ஜீப் வண்டி ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக அவ்விடத்தில் நின்று அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
May you like This Video





