அம்பாறையில் இடம்பெற்ற விபத்து : இருவர் காயம்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளத்திற்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கும் இடையே அமைந்துள்ள அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (9) இரவு இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து பொலிஸார்
நெல் அறுவடை முன்னாயத்த பணியில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று சடுதியாக பிரதான வீதியை நோக்கி இரு வழி சாலையை மறித்து திரும்ப முற்பட்ட வேளை மறுமுனையில் இருந்து வேகமாக பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
.குறித்த விபத்து சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி காலில் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்களில் ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர்கள் மற்றும் உழவு இயந்திர சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று பகுதியில் இருந்து வந்த நோயாளர் காவு வண்டி காலதாமதமாக வந்தமையினால் திரும்பி சென்றது.
மேலும் இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொது இணக்கப்பாட்டுடன் சமாதானமாக செல்ல முற்பட்ட போதும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதுடன் விபத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
