அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்து : தமிழக இளம்பெண் உட்பட 4 இந்தியர்கள் பலி
அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பருக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் உள்ள பெண்டான்வில்லி நோக்கி காரில் பயணித்தபோது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
பயங்கர விபத்து
இவர்கள் டெக்சாஸ் மாகாணம் காலின்ஸ் கவுன்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரின் பின்புறம் லொறி ஒன்று மோதியது.
இதன் காரணமாக கார் கவிழ்ந்ததில், பின்னால் வந்த 4 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் கார் தீப்பிடித்து எரிந்ததினால் காரில் இருந்த 4 பேரால் வெளியே வரமுடியாத நிலையில் அவர்கள் காருக்குள்ளே கருகி பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்களது உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உதவியை பெற்றோர் நாடியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam