குறைவடைந்துள்ள வாகன விபத்து மரணங்கள்
இலங்கையில் வாகன விபத்து மரணங்கள் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிளீன் சிறிலங்கா திட்டத்திற்கு சமாந்திரமாக பொலிஸார் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு மரணங்களில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பதிவான மரணங்கள்
போர் காலத்தில் பதிவான மரணங்களை விடவும் விபத்துக்களினால் அதிகளவு மரணங்கள் பதிவாகின்றன என தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துக்கள் கண்ணுக்கு புலப்படாத ஓர் பயங்கரவாதமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன விபத்து
கடந்த காலங்களில் வாகன விபத்து மரணங்கள் நாளாந்தம் ஒன்பது என பதிவாகிய போதிலும் தற்பொழுது அந்த எண்ணிக்கை 4 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
வாகன விபத்துக்களினால் நாள் தோறும் 10 முதல் 15 பேர் நிரந்தரமாக முடமாகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைகளினால் நத்தார் தினமன்று எந்தவிதமான விபத்துக்களும் பதிவாகவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
