வவுணதீவு, வாழைக்காட்டு சந்தியில் வானுடன் மோதிய மோட்டார்சைக்கிள்: ஒருவர் பலி
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வாழைக்காடு சந்தியில் வான் ஒன்றும் மோட்டர்சைக்கிளும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்த கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த மைலப்போடி சுந்தரலிங்கம் (வயது 58) என்ற நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் வான் சாரதியை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
