கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வானுடன் மோதிய கனரக வாகனம்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் மீது கனரக வாகனம் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு வேளையில் முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வான் முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியூடாக பயணித்த கனரக வாகனமொன்று வானுடன் மோதியுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது வானில் சிலர் இருந்துள்ள போதும் அவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இந்த விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த விபத்து சம்பம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
