இணுவில் தொடருந்து கடவை கோர விபத்து: டக்ளஸ் அளித்த உறுதி
இணுவில் பகுதியில் நிரந்தர தொடருந்து கடவை மற்றும் சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும் வரை தொடருந்து கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வொன்றை முன்மொழிந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் ஏற்பட்ட தொடருந்துடன் வான் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிறு குழந்தை உள்ளிட்ட இருவர் பலியாகி இருந்தனர்.
களவிஜயம்
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் (16.02.2024) களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில் நிலைமைகளை ஆராய்ந்த டக்ளஸ் துறைசார் திணைக்களத்துடன் கலந்துரையாடி சமிஞ்ஞை விளக்கை பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
குறித்த நடவடிக்கை நடைபெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அதுவரை தற்காலிக ஏற்பாடாக இளைஞர் இருவரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன் அதற்கான மாதாந்த கொடுப்பனவை கட்சி நிதியில் இருந்து வழங்குவதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


