மட்டக்களப்பில் இராணுவ வண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு - இராணுவ சாரதி கைது
மட்டக்களப்பு - கிரான் தொப்பிக்கலை வீதியில் இராணு ட்ரக் வண்டியும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி நேர்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றையதினம் (15.11.2026) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இராணுவ ட்ரக் வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
திகிலிவெட்டை நாகதம்பிரான் வீதி சேர்ந்த 52 வயதுடைய செல்லத்துரை சுரேஸ்குமார் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சாரதி கைது
குறித்த நபர் சம்பவ தினமான இன்று காலை 8 மணியளவில் கிரானில் இருந்து தொப்பிக்கலை நோக்கி பிரயாணித்த போது பிரதேச செயலகத்துக்கு அருகாமையிலுள்ள வீதி வளைவை அண்மித்த பகுதியில் தொப்பிக்கலையில் இருந்து கிரான் நோக்கி பிரயாணித்த இராணுவ ட்ரக் வண்டியும் நேருக்கு நேராக மோதி விபத்துக்கு உள்ளானதையடுத்து சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் இராணுவ ட்ரக் வண்டியை செலுத்தி வந்த இராணுவ சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.