‘‘தனியார் நிறுவனமொன்றின் கணக்குக்கு பறிமாற்றப்பட்டுள்ள 1257 மில்லியன் டொலர்கள்’’
நனோ உரத்தை கொள்வனவுக்காக இந்திய நிறுவனத்துக்கு முறைகேடாக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் (Vijith Herath) மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு நகர மண்டப மக்கள் வங்கியின் கிளையில் பராமரிக்கப்பட்டு வரும், வரையறுக்கப்பட்ட ஐக்கிய விவசாயிகள் நம்பிக்கை நிதியம் என்ற தனியார் நிறுவனத்தின் கணக்குக்கு 1257 மில்லியன் டொலர்கள் பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய விவசாயிகள் நம்பிக்கை நிதியம் என்ற அமைப்பு 2021 ஒக்டோபர் 18ஆம் திகதியன்றே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதே தினத்தில் பணமும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் அல்லது அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் இந்த பணத்தை பரிமாற்றம் செய்யும் உத்தரவு, ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தரவினால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எந்த அடிப்படையில் 290 மில்லியன் ரூபா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்று விஜித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக்கொடுப்பனவில் கப்பல் போக்குவரத்துக்கான 90.2மில்லியன் ரூபாவும் உள்ளடங்குவதாக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் விஜித ஹேரத்தின் கருத்துக்களுக்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே,
குறித்த கொடுப்பனவு பரிமாற்றத்தில் முறைகேடுகள் இல்லை.வரையறுக்கப்பட்ட இந்திய விவசாய உரக்கூட்டுறவுசு நிறுவனத்தின் உள்ளூர் முகவருக்கே அந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும முதலீடு ஊக்குவிப்பு
திட்டத்தின் கீழ் இந்திய உயர்ஸ்தானிகரகம் ஊடாக நனோ உரத்தை கொள்வனவு செய்வதற்கான
முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
