நோர்வூட்டில் இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய் கைது!
ஹட்டன் - நோர்வூட் பகுதியில் இரண்டு பாடசாலை மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கிளிநொச்சி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணிபுரிந்து வருவதுடன், அவரை இன்றைய தினம் (15.02.2023) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்டத்தில் வசிக்கும் சந்தேக நபர், விடுமுறையில் வீடு திரும்பிய நிலையில், அதே பகுதியில் வசிக்கும் 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவிகளைத் தேயிலைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
அதன்போது, அவர்களில் ஒரு சிறுமி சந்தேக நபரிடமிருந்து தப்பியுள்ளார்.
அதனை அவதானித்த பிரதேச வாசிகள் சந்தேக நபரை மடக்கி பிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இரண்டு பாடசாலை மாணவிகளின் தந்தை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் டிக்கோயா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
