பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு நித்திரை வராது : சாடும் கருணா
களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் நித்திரை வருவதில்லை கருணா அம்மான் (Karuna Amman) தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போராளிகளின் புதை குழிகளில் நின்று
மேலும் தெரிவிக்கையில், களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பின் வாயில் வரும் வார்த்தை பிள்ளையான் பிள்ளையான், பிள்ளையான பற்றி பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை.
அரசியல் பழிவாங்கலினால் திட்டமிட்டு பிள்ளையானை கைது செய்தார்கள். இந்த உலகம் முழுவதும் பிள்ளையான் பிள்ளையான் என கத்துகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
72 வருடங்களுக்கு மேலாக வீட்டுக்கு வாக்களித்து வாக்களித்து வீடும் இல்லாமல் தமிழ் மக்கள் நடுத்தெருவில் கொண்டு வந்தவர்கள்தான் தமிழரசுக்கட்சியினர் என இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
போராளிகளின் புதை குழிகளில் நின்று கேவலமாக வாக்கு கேட்கும் நீங்கள் போராளிகளின் குடும்பங்களை புதைகுழிக்குள் கொல்லாமல் பாதுகாக்க முடியாமல் நிற்கின்றீர்களே வெட்கம் இல்லையா. எங்களை விமர்சிப்பவர்கள் அனைவரும், நாங்கள் போட்ட பாதைகளால்தான் செல்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
