நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திருப்பேன் : டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்றிருந்தால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திருப்பேன் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் நான் வெற்றி பெற்றிருந்தால் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட கடைசி ஜனாதிபதியாக நான் தான் இருந்திருப்பேன்.
ஏனெனில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருப்பேன்.
சர்வகட்சி அரசாங்கத்தின் தேவை
தற்போதைய நாட்டின் நிலையில் சர்வகட்சி அரசாங்கமொன்றே தேவையாக உள்ளது.
எனினும், சர்வ ஒட்டு அரசாங்கமே முன்னெடுக்கப்படுகின்றது. சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படாமல் பொதுமக்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என தெரிவித்துள்ளார்.
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் மக்கள் - சஜித் பிரேமதாச |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 15 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
