ஆனந்த தேராின் வேந்தா் நியமனத்துக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் எதிா்ப்பு
கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மாணவர் சமூகமும் ஏகமனதாக அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி என்பது ஒருபோதும் அரசியல் நியமனமாகவோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் வகையிலோ அமையக்கூடாது என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறுகிறது.
வேந்தருக்கு சட்டப்பூர்வ நிர்வாக அதிகாரங்கள் இல்லை என்றாலும், அவர் பல்கலைக்கழகத்தின் கௌரவத்தின் சின்னமாக, குறிப்பாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா்.
இந்தநிலையில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கான அரசியல் நியமனம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சுதந்திரத்தையும் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் அழிக்கக்கூடும் என்று மாணவர் ஒன்றியமும்,மாணவா் சங்கமும் எச்சாிக்கை விடுத்துள்ளன.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
