தற்காலிகமாக மூடப்படும் A9 வீதியின் ஒரு பகுதி : சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருகொடவில், கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியின் ஒரு பகுதி, குறிப்பாக '7வது மைல் கல்' பகுதி, இன்று இரவு (22) 10.00 மணி முதல் நாளை (23) அதிகாலை 2.00 மணி வரை தற்காலிகமாக மூடப்பட உள்ளது.
அக்டோபர் 19 அன்று அப்பகுதியில் நிகழ்ந்த வீதி விபத்துடன் தொடர்புடைய 'பிரைம்மூவர்' இழுவை வாகனத்தை விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினாலேயே வீதி இவ்வாறு மூடப்படவுள்ளது.
மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு
இந்தக் காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்லும் வாகனங்கள் கட்டுகஸ்தோட்டம், மடவள, வத்தேகம, உகுவலை மற்றும் எல்வள வழியாகச் சென்று A9 வீதியை அடையலாம்.
அதேபோன்று, மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் கனரக வாகனங்கள் எல்வள, உகுவலை, வத்தேகம, மடவள மற்றும் கட்டுகஸ்தோட்ட ஊடாகப் பயணிக்க வேண்டும்.
மேலும், இலகுரக வாகனங்கள் அலவத்துகொட, ஓவிஸ்ஸ, பூஜாபிட்டிய மற்றும் அம்பதென்ன ஊடாக கட்டுகஸ்தோட்டவைச் சென்றடைந்து அங்கிருந்து கண்டி திசையை நோக்கிப் பயணிக்க முடியும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக் கொள்ளும் வகையில், குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் News Lankasri