கல்லடி பாலத்தின் மேலிருந்து இளைஞரொருவர் தற்கொலைக்கு முயற்சி
மட்டக்களப்பு - கல்லடி பாலத்தின் மேல் இருந்து தற்கொலை செய்ய வாவியில் குதித்த இளைஞர் ஒருவர் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுதாவளையை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பாலத்தின் அருகில் இளைஞர் கொண்டு வந்த பை மற்றும் செருப்பு என்பவற்றைக் கழற்றி வைத்து விட்டு பாலத்தின் மேல் இருந்து வாவியில் குதித்துள்ளார்.
அப்போது அந்த பகுதியில் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக வாவியில் குதித்த இளைஞரை காப்பாற்றிக் கரை சேர்த்ததையடுத்து அவனை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
