திருகோணமலையில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று (24) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலினால் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கே.ஜே.எஸ்.பிரசன்ன குமார (27வயது) என்ற இளைஞர் காயம் அடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
நண்பர்களுடன் விருந்துபச்சாரம் ஒன்றிற்கு சென்று வீடு திரும்பிய நிலையில், தனிமையாக உறங்கிக் கொண்டிருந்த போதே தாக்குதல் மெற்கொள்ளப்பட்டுள்ளது.
உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் வெட்டிய நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொலைபேசி மூலம் சகோதரிக்கு தெரியப்படுத்தியதாகவும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
