காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
காத்தான்குடியில் இருந்து வியாபாரத்துக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஐஸ் போதைப் பொருளை வாங்கிக் கொண்டு சென்ற ஒருவரை காத்தான்குடியில் வைத்து கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மாவட்ட குற்ற விசாணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார், கடற்படை புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான நேற்று இரவு காத்தான்குடி பிரதேசத்தில் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த இளைஞனை நிறுத்திச் சோதனையிட்டபோது அவர் தனது உடலில் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற 5 கிராம் 110 மில்லிக்கிராம் கொண்ட ஐஸ் போதைப் பொருளையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி பிரதேசத்தைச்
சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி எனவும் இவரை காத்தான்குடி பொலிஸாரிடம்
ஒப்படைத்து இவரை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்
தெரிவித்தார்.



