புத்தளத்தில் அடர்ந்த காட்டில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த இளைஞன்
புத்தளம், பாலாவி வன்னித்தீவு பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாத, அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் பாலாவி, வன்னித்தீவு, சுருவம் மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய செனத் தில்ஹார என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம்
உயிரிழந்த இளைஞருக்கு அண்மைய நாட்களாகக் காதல் விவகாரம் ஒன்று இருந்ததாகவும், அது தொடர்பில் ஏற்பட்ட மன உளைச்சலால், சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது கைகளைத் தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், இந்தக் காதல் விவகாரமே அவரை இந்த விபரீத முடிவை நோக்கித் தள்ளியிருக்குமோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், இது உயிர்மாய்ப்பா, அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் மர்மங்கள் ஒளிந்திருக்கின்றதா என்ற கேள்விகளுகான பதில்கள் கிடைக்கவில்லை.
பொலிஸாரின் விரிவான மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கைகளின் பின்னரே முழுமையாக வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam