காதலிக்க மறுப்பு தெரிவித்ததனால் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து - செய்திகளின் தொகுப்பு
கொழும்பு - நாரஹேன்பிட்டிய பகுதியில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததனால் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர், நாரஹேன்பிட்ட நில அளவையாளர் அலுவலக கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரும், காயமடைந்த யுவதியும் காலியில் இருந்து நெடுஞ்சாலை வழியாக நாரஹேன்பிட்ட பகுதிக்கு பேருந்தில் வந்துள்ளனர்.
நாரஹேன்பிட்ட கிருள வீதியில் அமைந்துள்ள நில அளவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக பேருந்தில் இருந்து இறங்குவதற்கு தயாரான போதே சந்தேகநபர் வைத்திருந்த கத்தியால் யுவதியை தாக்கியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா



