போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்கிய வயோதிபப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக வயோதிப் பெண் ஒருவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளரான போதைக்கு அடிமையான ஒருவரே இந்த பாதகச் செயலை செய்துள்ளார்.
ஹங்வெல்ல பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக சந்தேகத்தில், தனது உதவியாளருக்கு போதைப்பொருளை வழங்கி, குறித்த வயோதிபப் பெண்ணை(71) தவறான முறைக்குட்படுத்த அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட விசாரணை
சந்தேகநபர் நேற்று(14.10.2025) மாலை கைது செய்யப்பட்டதாக மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் நீண்ட விசாரணையின் பின் சம்பவத்தின் மூளையாக செயற்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டபோது, இரு சந்தேகநபர்களிடமும் 24 கிராம் ஐஸ் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
