விசேட அதிரடிப்படையினரால் பெண் ஒருவர் கைது
அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று திருக்கோவில் குடிநிலப்பகுதியிலுள்ள வீட்டை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது,குறித்த பெண்ணின் கணவர் யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் இன்று அதிகாலையில் இரண்டு பொதிகளுடன் வந்துள்ளதாகவும் ,அதனை அவர் வீட்டில் ஒழித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,கஞ்சாவினை விற்பதற்கு முயற்சித்து வந்த நிலையில், விசேட அதிரடிப்படையினர் அதனை வாங்குவதாக நாடகமாடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன், 2 கிலோ கஞ்சாவையும் மீட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணையும்,மீட்கப்பட்ட கஞ்சாவையும் விசேட அதிரடிப்படையினர்
பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
