வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வட் வரி என்ற போர்வையில் பொருட்களின் விலையை நியாயமற்ற வகையில் உயர்த்தும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.
வரி நடைமுறைக்கு வர முன்னதாகவே நியாயமற்ற வகையில் பொருட்களின் விலையை அதிகரித்துள்ள வர்த்தகர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துரித தொலைபேசி எண்
இது தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க 1977 என்ற துரித தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடு முழுவதும் சோதனைகளை முன்னெடுத்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
