இலங்கை அதிரடி படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட ஆபத்தான பெண்
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா அல்லது “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண் ஒருவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் தற்போது பிரான்ஸில் வெளிநாட்டில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாரிய குற்ற செயல்களுடன் தொடர்புடைய ரூபனுடன் நெருங்கிய தொடர்பில் அவர் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கையில் உள்ள போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு போதை பொருள் பெற்றுக் கொடுப்பதற்கும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பெண் நேற்று மோதரையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam