தென்னிலங்கையில் மாம்பழத்தினால் வந்த வினை
தென்னிலங்கையில் 7 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப் தோட்டத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மாம்பழ தோட்டத்திற்குள் நுழைந்து நேற்று திருட்டுச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த தோட்ட உரிமையாளர் பிரதேசவாசிகளின் உதவியுடன் நபர்களை பிடித்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சந்தேகநபர்கள் சூரியவெவ மற்றும் ஹொரணை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் 14 வயதுடைய பாடசாலை மாணவனும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
