மன்னாரில் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலான வாகனம் (Photos)
மன்னார் - முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் சிறிய பட்டா ரக வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (14.06.2023) இடம்பெற்றுள்ளது.
வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி பயணித்த சிறிய பட்டா ரக வாகனத்தின் இஞ்சின் பகுதி திடீரென தீ பற்றிக்கொண்டுள்ளது.
இதன்போது வாகன சாரதி மற்றும் உதவியாளர் துரித நேரத்தில் இருந்து வெளியேறி வாகனத்தில் இருந்த பொருட்களை அகற்றியுள்ளனர்.
திடீரென தீப்பற்றல

இவ்வாறு வெளியேறிய சற்று நேரத்தில் வாகனம் முழுவதும் தீ பரவல் ஏற்பட்டும் முழுமையாக வாகனம் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், சாரதியும் உதவியாளரும் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam