கடும் பொருளாதார நெருக்கடி - இளம் தந்தை எடுத்த விபரீத முடிவு
ஹோமாகம பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் தனது வீட்டின் கூரையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இளம் தந்தை ஒருவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
ஹோமாகம, வடக்கு பிட்டிபன, ஹெட்டிகொடவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தோமஸ் திஸாநாயக்க கலன மதுசங்க என்ற 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் இவர், கடந்த சில நாட்களாக வேலை இல்லாத நிலையில் மனமுடைந்துள்ளர் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாகவும் மனைவியிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு வயது மகளின் தந்தையான அவர், குடும்பம் வாழ சரியான வழி இல்லாததால் 15 முறைக்கு மேல் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்து கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
