தவறுதலாக வெடித்த பொலிஸாரின் துப்பாக்கி! தென்னிலங்கையில் குழப்பம்
மாத்தறை திஹாகொட பொலிஸ் நிலையத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
பொலிஸார் சோதனை
பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் அதனை நிறுத்தி சோதனையிட சென்ற போது, திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாகி இயங்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனால் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவன் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஒன்றுதிரண்ட மக்கள்
இச்சம்பவத்தையடுத்து, திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமையைக் கட்டுப்படுத்த அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 22 மணி நேரம் முன்

கல்வித் தகுதி தேவையில்லை... 90,000 பவுண்டுகள் வரை ஊதியம்: பிரித்தானியாவில் வேலை வாய்ப்புகள் News Lankasri

தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை:7 வயது மகனுடன் தாய் எடுத்த வேண்டாத முடிவு! News Lankasri
