கனடாவில் யாழ். தமிழருக்கு ஏற்பட்ட விபரீதம்! - பொது மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார் (Video)
கடந்த மாதம் கனடா - மிசிசாகாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 35 வயதான இலங்கை தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த விபத்து கடந்த (டிசம்பர் ) மாதம் 17ம் திகதி Dundas - Dixie சாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த சுரேஷ் தர்மகுலசிங்கம், அருகில் உள்ள உணவகத்தில் தேனீர் வாங்கிக் கொண்டு அந்தச் சந்திப்பைக் கடந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தர்மகுலசிங்கம் 2010ம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அவர் லொறி சாரதியாக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது லொறியை நோக்கிச் தர்மகுலசிங்கம் சென்று கொண்டிருந்தபோது, 2008-2012 Ford Escape SUV என்ற கார் அவர் மீது மோதியுள்ளது.
கறுப்பு நிறத்தில் இருப்பதாக நம்பப்படும் வாகனத்தின் சாரதி, "பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல்" அந்த இடத்தை விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தர்மகுலசிங்கம் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் கடந்த மாதம் 24ம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
தர்மகுலசிங்கம் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையில் திருமணம் செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது. விபத்தின் காரணமாக வாகனத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவருடன் கலந்தாலோசித்து பொலிஸில் சரணடையுமாறு விசாரணையளர்கள் கோரியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு காணொளி (surveillance video)அல்லது dashcam காணொளி இருப்பவர்கள் பொலிஸார் அல்லது குற்றத் தடுப்பாளர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கஞ்சியும் செல்ஃபியும் 1 நாள் முன்

மாத இறுதியில் லட்சுமி தேவியின் அருளால் செல்வந்தராக போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? News Lankasri

லட்சக்கணக்கில் செலவு செய்து நாயாகவே மாறிய நபர் - ஏன் தெரியுமா? வாயடைத்துபோன குடும்பத்தினர்கள் Manithan

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தர்.. தந்தையின் நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு.. Cineulagam

சிம்பு என்ன டார்ச்சர் பண்ணுறாரு... ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய சீரியல் நடிகை! Manithan

11 நாள் முடிவில் உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- சூப்பர் கலெக்ஷன் Cineulagam

55 வயதில் கனடா சாக்லேட் நிறுவனத்தில் வேலை! மகிழ்ச்சியில் துள்ளிய நபருக்கு தெரியவந்த உண்மை... எச்சரிக்கை செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022