கனடாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழர்! - பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை
கனடா - மார்கம் நகரில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 56 வயதான தமிழர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
16வது அவென்யூ மற்றும் மிங்கே அவென்யூ சந்திப்பில் வைத்து சாம்பல் நிற கார் ஒன்று குறித்த நபர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, 1-866-876-5423 அல்லது 7704 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்க முடியும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan