அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட விசேட யுக்திய நடவடிக்கை
சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுக்கும் நோக்கமாக யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று(12) நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பிரதான வீதி ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
இப்பரிசோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஒருங்கிணைப்பில் கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதானவர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின் போதை மாத்திரைகள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட கடந்த 2023 ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி முதல் தற்போது வரை குற்றச் செயல்கள் கணிசமானளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
