வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க
வவுனியா வைரவபுளியங்குளம், ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க விஜயம் மேற்கொண்டுள்ளார்
வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று காலை முதல் வவுனியாவில் உள்ள சர்வமத ஆலயங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதனடிப்படையில், வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆலய பிரதம குருவிடம் ஆசிகளைப் பெற்றுக் கொண்டதுடன் நாட்டின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி
அவர்களும் குறித்த சந்திப் கலந்து கொண்டதுடன், வவுனியா மாவட்டத்தின் பல
இடங்களுக்குப் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க விஜயம்
மேற்கொண்டிருந்தார்.








