குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்குமரங்கள் அதிகளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (13.05.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதனால் கடற்கரைப் பகுதியிலுள்ள இயற்கை வனப்பு பகுதி தீயினால் எரிந்துள்ளதுடன், அதிகளவு மரங்களும் எரிந்துள்ளன.
விசாரணை நடவடிக்கை
தமது பிரதேசத்தில் அமைந்துள்ள இயற்கை வனப்பு வகுதியில் தீபரவல் ஏற்பட்டுள்ளதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், குருக்கள்மடம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்களும், ஒன்றிணைந்து தீ மேலும் பரவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
முன்னரும் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருந்ததாகவும், இந்நிலையில் இத்தீப்பரவல் சம்பவம் திட்டமிட்ட ஓரு சம்பவமா? இதன் சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
