மன்னாரில் விநோதமான முறையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம்..!
மன்னார் (Mannar) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறுவன் ஒருவருடன் பெண் ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றுக்குச் சென்று சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (25) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோவிலுக்கு நிதி சேகரிப்பு
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குறித்த இருவரும் குடிக்க நீர் கேட்டுள்ளனர்.
அவர்கள் குடிக்க நீர் கொடுத்த வேளையில், தான் சாத்திரம் பார்ப்பதாகக் கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு சாத்திரம் பார்த்துள்ளார்.
சிசிரிவி வீடியோ காட்சி
இதன்போது வீட்டில் இருந்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசிய நிலையில், அந்த பெண் அணிந்திருந்த சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார்.
மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை சந்தேகிக்கப்படும் குறித்த பெண் சிறுவன் ஒருவருடன் குறித்த பகுதியில் வீதியால் சென்ற சிசிரிவி வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
