இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
புதிய கோவிட்19 அலையைத் தவிர்க்க முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சரியான சுகாதார ஆலோசனைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமென சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா உட்பட பல நாடுகளில் தற்போது கோவிட்19 வேகமாக பரவி வருவதாக அவர் கூறினார். மேலும் பேசிய மருத்துவர் அன்வர் ஹம்தானி, இலங்கை மக்கள் 02 வருடங்களாக கோவிட்19 தாக்குதலுக்கு உள்ளாகினரென்பதை மறந்து விட்டனர்.
சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றவும்

பொது பயணிகள் பஸ்களில் பலர் முகக்கவசம் அணிவதில்லை. பலர் தொற்று நீக்கி பயன்படுத்தவும், கைகளைக் கழுவவும், ஒரு மீற்றர் இடைவெளியை கடைப்பிடிக்கவும் மறந்துவிட்டனர்.
இந்நிலையில் மீண்டும் கோவிட்19 பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே நாட்டில் மீண்டும் இந்நோய் பரவாமல் தடுக்க அனைவரும் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam
தங்கமகள் சீரியலை தொடர்ந்து யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புதிய விவரம் Cineulagam