புலம்பெயர் அமைப்புகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு: அரசாங்கம் குற்றச்சாட்டு-செய்திகளின் தொகுப்பு
வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பது போல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை அரசால் தடை நீக்கம் செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இலங்கை மீண்டெழ தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,“உள்நாட்டுப் போர் காரணமாக வடக்கு, கிழக்கிலிருந்து பெருமளவிலான தமிழ் மக்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.
அவர்களில் செல்வந்தர்கள் தத்தமது நாடுகளில் தனிநபர்களாவும், அமைப்புக்கள் ரீதியாகவும் செயற்பட்டு வருகின்றார்கள்.
எனினும், அவர்களுக்கிடையில் நல்லுறவு இல்லை. இங்கு தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பதுபோல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும், தனிநபர்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன.”எனவும் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam