சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட புத்தக கண்காட்சி! ஜனாதிபதி
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கிய விசேட புத்தகக் கண்காட்சியொன்றை இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள் இன்று (22) முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் 23 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எழுத்தாளர்களுடன் உரையாடிய ஜனாதிபதி

இன்று காலை கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை, இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இலங்கை மன்றக் கல்லூயின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி, புத்தக வெளியீட்டாளர்கள் சங்க உறுப்பினர்களான விஜித யாப்பா, எச்.டி. பிரேமசிறி, ஆரியதாச வீரமன், அதுல ஜெயக்கொடி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த வருட புத்தகக் கண்காட்சியில் 400 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்களின் விற்பனைக் கூடங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதி அவர்கள் அவற்றை நேரில் சென்று பார்வையிட்டதுடன் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனும் சிறிது நேரம் உரையாடினார்.
கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்திருந்த பொது மக்களுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.


இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam