இலங்கை விரையும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் நிதியத்தின் முதல் மீளாய்வுக்காக குறித்த பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதன் முதல் மதிப்பாய்வு செப்டம்பர் 14 முதல் 27 வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஜூன் மாதத்தின் இறுதி வரையிலான திட்டத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் மற்றும் நிர்வாகக் குழு இருவராலும் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே சுமார் 338 மில்லியன் டொலர் நிதியை வழங்க அனுமதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri