தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மகன் : கந்தப்பளையில் அதிர்ச்சி சம்பவம் (Photos)
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தில் தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எதர்செட் தோட்டத்தில் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் நேற்று முன்தினம் (01.02.2023) இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று ஆண் பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என்பவரே இந்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

வாக்குமூலம் அளித்த மகன்
தனது தந்தையை தாக்கி கொலை செய்ததாக பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ள மகனை கந்தப்பளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் அயல் வீட்டார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இச்சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam