பொதியொன்றினால் யாழில் இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை
யாழ்ப்பாணம் - கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு, பொதியை பெற இருந்தவரை தகாத வார்த்தைகளால் பேசி , மிரட்டியமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கான 6ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதிரிப்பாகம் ஒன்றினை கொழும்பில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு கொள்வனவு செய்து, அதனை யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் பொதிகள் சேவைகள் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு 600 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் குறித்த பொதியினை பெற சென்ற போது, பொதி தொலைந்து விட்டது என பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்துள்ளடன், பொதியினை தொலைத்தமையால் பொதியில் இருந்த பொருளின் விலையை தருமாறு கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதேவேளை தாம் இவர்களின் பொதிகள் சேவைகளை நம்பி கட்டணம் செலுத்தி பொதிகளை அனுப்பும் போது பொறுப்பற்ற விதமாக அவற்றினை தவற விட்டு, எந்தவிதமான பொறுப்பும் அற்ற வகையில் தம்மை தகாத வார்த்தைகளால் பேசியமையால் தான் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சகல விதத்தாலும் நாம் நசுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என கவலை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு மேலும் அதிகரிக்கும் சுமை! மசாலாப் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri
