ஈழத்தமிழருக்கான வரைபில் முஸ்லிம் - சிங்கள - மலையக மக்களுக்கும் அதேயளவு பங்கு! பேராசிரியர் கணேசலிங்கம் (Video)
ஈழத்தமிழர்களுக்கு தீர்வாக வரையும் வரைபில் முஸ்லிம், சிங்கள, மலையக மக்களுக்கும் அதேயளவு உரித்துடைய பங்கினை இந்த வரைபில் உள்ளடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் சிந்தனை மைய இணைத்தலைவரும், யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை தலைவருமான பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
மக்கள் சிந்தனை மையம் தமிழ் மக்களின் தீர்வாக அமையக்கப்படும் வரைபு தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பிலுள்ள விடுதியொன்றில் நேற்றைய தினம் (09.10.2023) இடம்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வை நோக்கிய வரைபு
மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கை சார்ந்திருக்க கூடிய அரசியல் தீர்வை நோக்கி பல தளத்தில் பல்வேறுபட்ட வரைபுகள் முதன்மைப்படுத்தப்பட்டது. வரைபுகள் அனைத்துமே அரசியல் கட்சிகளாலும் சில சிவில் அமைப்புக்களாலும் தொடக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலை காணப்பட்டது.
இதனால் அந்த சூழலையும் இன்று இருக்கக்கூடிய சூழலையும் கருத்தில் கொண்டு ஒரு வரைபை தயார் செய்து அந்த வரைபினுடைய உள்ளடக்கம் அனைத்தையும் சிவில் அமைப்புக்களுடன் உரையாடி அதில் என்ன என்ன விடயங்களை இணைத்துக் கொள்வது, அதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி சிவில் அமைப்புக்களின் காத்திரமான பங்கினை இந்த வரைபில் உள்ளடக்க வேண்டும் என்ற நோக்கோடு வடக்கு, கிழக்கு சார்ந்த சிவில் அமைப்புக்களுடன் சந்தித்து உரையாடியுள்ளோம்.
இந்த உரையாடலில் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள சிவில் அமைப்புக்கள் அதிகமான விடயங்களை தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் உள்ளடக்கங்களை வலிமைப்படுத்துவதற்கும் ஆரோக்கியமான உரையாடலை செய்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட ஒரே தீர்வு
எனவே இந்த வரைபை ஈழத் தமிழர்களுடைய அரசியல் சார்ந்திருக்க கூடிய தீர்வாகவும், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், புலம்பெயர்ந்த அமைப்புக்கள் அனைவருக்கும் இடையிலான பொதுவான ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரே தீர்வாகவும் முதன்மைப்படுத்துவதற்கான நோக்கம் கொண்டு இந்த மக்கள் சிந்தனை மையம் ஏற்படுத்தியுள்ளது.
2001ம் ஆண்டில் இருந்து மக்கள் சிந்தனை மையம் அரசியல்கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடி இந்த வரைபை வரைந்துவிட்டு அது தொடர்பில் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களிடம் தெளிவையும் உண்மை தன்மையையும் வலியுறுத்திவிட்டு மீண்டும் அரசியல் கட்சிகள், புலம்பெயர்ந்த அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பாக உரையாடி ஒரு இறுதி முடிவை எடுத்த பின் ஊடகங்கள் மூலம் அதனை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
